மீண்டும் பற்றியெரியும் பிரான்ஸ் தெருக்கள்: இம்முறை மஞ்சள் மேலாடை போராட்டங்கள் காரணம்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

நாட்ரி டாம் தேவாலய தீ, பிரான்ஸ் நாட்டவர்களை இணைத்ததென்னவோ உண்மைதான், ஆனால் அதுவே இப்போது பாரீஸ் தெருக்களில் தீப்பற்றியெரிவதற்கு ஒரு காரணமாக ஆகியுள்ளது.

23ஆவது வாரமாக மஞ்சள் மேலாடை போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டங்களை மேற்கொண்டு வரும் நிலையில், பாரீஸில் 5000 பேர், மொத்த பிரான்சிலும் 60,000 பேர் என ஏராளமான பொலிசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் போராட்டக்காரர்கள் ஒரு கார், மோட்டார் பைக்குகள் மற்றும் சாலைத்தடுப்புக்களை தீ வைத்து எரித்ததால் அந்த இடமே தீப்பிழம்பாக காணப்பட்டது.

ஆங்காங்கு பொலிசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல்கள் ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பாரீஸில் மட்டும் 126 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்ரி டாம் தேவாலயம் தீப்பற்றியதற்காக மொத்த பிரான்ஸ் நாடும் கண்ணீர் வடித்த நிலையில், தேவாலயத்தை மீண்டும் கட்டி எழுப்புவதற்காக பெருந்தொகை குவிந்தது போராட்டக்காரர்களை ஆத்திரப்பட வைத்துள்ளது.

ஒரே இரவில் இவர்களால் நாட்ரி டாமுக்காக ட்ரக் கணக்கில் பணத்தைக் கொண்டு கொட்ட முடியும், ஆனால், ஏழைகளுக்கு உதவுவதற்கு இவர்களால் முடியாது என்கிறார்கள் போராட்டக்காரர்கள்.

வரி குறைப்பு தொடர்பாக அறிவிப்புகளை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் வெளியிட இருந்த நேரத்தில்தான் நாட்ரி டாம் தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனால் அவர் ஜனங்களுக்கு உரையாற்றுவது ஒத்தி வைக்கப்பட்டது.

மீண்டும் அடுத்த வாரத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் உரையாற்ற இருக்கிறார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்