மீண்டும் ஆசிரியர் வேலைக்கு திரும்புகிறார் பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவி!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

முறையான கல்வி பயிலாத வயது வந்தவர்களுக்கு உதவுவதற்கான அமைப்பு ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பிரான்சின் முதல் பெண்மணி மீண்டும் ஆசிரியர் வேலைக்கு திரும்ப இருக்கிறார்.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் மனைவியும் பிரான்சின் முதல் பெண்மணியுமான பிரிஜிட் மேக்ரான் அடுத்த கல்வி ஆண்டிலிருந்து மீண்டும் ஆசிரியர் வேலைக்கு திரும்ப இருப்பதாக ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே பாரீஸில் ஆசிரியையாக பணியாற்றிய பிரிஜிட், பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய வயது வந்தவர்களுக்கு மீண்டும் கல்வி கொடுப்பதற்காக அமைக்கப்படும் ஒரு நிறுவனத்தில் அவ்வப்போது பிரெஞ்சு பாடம் எடுக்க இருக்கிறார்.

அவர் அந்த பள்ளியின் ஆசிரியர் கமிட்டியின் தலைவராகவும் இருப்பார். இந்த பள்ளியில் 25 முதல் 30 வயது வரை உள்ளவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் 50 மாணவர்களுக்கு ஒன்பது மாதங்களுக்கு கணிதம், ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் வரலாறு ஆகிய பாடங்கள் கற்றுக் கொடுக்கப்படும்.

அத்துடன் எதிர்காலத்தில் பணி நேர் முகத் தேர்வுகளை எதிர் கொள்வதற்கான பயிற்சியும் அளிக்கப்படும்.

இது போதாதென்று வகுப்புகளின்போது கல்வி பயில்வோருக்கு குறைந்தபட்ச ஊதியமும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers