பிரான்சில் 2 ஆண்டுகளில் மட்டும் இத்தனை சதவீதம் காச நோய் அதிகரிப்பா? பொது சுதாகார மையத்தின் அதிர்ச்சி தகவல்

Report Print Santhan in பிரான்ஸ்

இரண்டு வருடங்களில் இல்-து-பிரான்சுக்குள் காச நோயாளிகளின் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2015 தொடக்கம் 2017 ஆம் ஆண்டின் இடைப்பட்ட இரண்டு வருடங்களில் இந்த அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது.

பிரான்சின் பொது சுதாகார மையம் இத்தகவலை இன்று வெளியிட்டுள்ளது. அதில், நுரையீரலை பலமாக தாக்கும் காச நோய், கடந்த 2017 ஆம் ஆண்டில் மட்டும் 1,927 பேருக்கு அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற மாகாணங்களை விடவும் இல்-து-பிரான்சுக்குள் இரண்டு மடங்கு அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்-செந்தனி மாவட்டம் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

2015 ஆம் ஆண்டில் ஒவ்வொரு ஒரு இலட்சம் பேரிலும் 14.6 வீதத்தினருக்கு இருந்த இந்த நோய், 2017 இல் 15.8 வீதமாக அதிகரித்திருந்தது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்