பாரிசில் நடந்த ஆர்ப்பாட்டம்.. பெண்கள் உயிரின் மதிப்பு என்ன? மேக்ரானை நோக்கி கேள்வி எழுப்பிய நடிகை!

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்ஸின் பாரிஸ் நகரில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் குடும்ப வன்முறைக்கு எதிராக பெண்கள் பலர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாரிசில் குடும்ப வன்முறைகளை கண்டித்து, சுமார் பல பெண்கள் உட்பட 2000 பேர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை, தங்கள் கணவர் அல்லது முன்னாள் கணவரால் 74 பெண்கள் கொல்லப்பட்டதாக புள்ளி விபரம் தெரிவிக்கப்பட்டது.

எனவே, பெண்கள் மீதான குடும்ப வன்முறையை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் Place de la Republiqueயில் நேற்று நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முக்கிய பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.

குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்துவின் மனைவி Muriel Robin, பாடகி Yael Naim, நடிகை Julie Gayet ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

அப்போது நடிகை Julie Gayet கூறுகையில், ‘இம்மானுவல் மேக்ரான், நீங்கள் தேசிய பிரச்சனையை எப்போதும் பேசுகின்றீர்கள். இந்நாட்டில் பெண்களின் உயிரின் மதிப்பு என்ன? எனக்கு ஒரு பதில் வேண்டும்!’ என கோபமாக தெரிவித்தார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers