பிரித்தானியர்கள் ஒரு கிலோ மீனை கூட எங்கள் நாட்டில் விற்க முடியாது: பிரான்ஸ் கடும் எச்சரிக்கை!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

ஒப்பந்தங்களற்ற பிரெக்சிட் நிறைவேறும் பட்சத்தில் பிரித்தானிய கடற்பகுதியில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் படகுகளை மீன் பிடிக்கஅனுமதிக்காவிட்டால், பிரித்தானியாவிலிருந்து ஒரு கிலோ மீனைக் கூட பிரான்சுக்கு ஏற்றுமதி செய்ய முடியாது என பிரான்ஸ் எச்சரித்துள்ளது.

ஒப்பந்தங்கள் எதுவுமின்றி பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் நிலையில், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளைச் சேர்ந்த யாரும் பிரித்தானிய கடற்பகுதியில் மீன் பிடிக்க அனுமதிக்கபடக்கூடாது என்ற குரல் பிரித்தானிய பக்கத்திலிருந்து ஒலித்து வருகிறது.

பிரித்தானிய அமைச்சர்கள் பிரெக்சிட்டை ஒரு காரணமாக காட்டி, பிரித்தானிய கடற்பகுதியை பிரித்தானியா தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளதோடு, இனி மீன் பிடிக்கும் உரிமையை எதிர்காலத்தில் வழங்கும் ஒப்பந்தம் எதையும் பிரஸ்ஸல்சுடன் செய்து கொள்வதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது பிரான்சின் மீனவ கமிட்டியை கடும் எரிச்சலுக்குள்ளாக்கியுள்ளது.

அந்த கமிட்டியின் தலைவரான Olivier Lepretre, அப்படி ஒரு சூழல் ஏற்படும் என்றால், பிரித்தானியாவிலிருந்து ஒரு கிலோ மீன் கூட பிரான்சுக்குள் போகாது என்பது உறுதி என்கிறார்.

ஐரோப்பிய ஒன்றிய விதிகளின்படி, பிரித்தானிய கடற்பகுதியில் 70 சதவிகித வெளிநாட்டு படகுகள் பிரித்தானிய கடற்பகுதியில் மீன் பிடிக்கலாம். ஒப்பந்தங்களற்ற பிரெக்சிட் நிறைவேறுமானால், வெளிநாட்டு படகுகள் பிரித்தானிய கடற்பகுதியில் மீன்பிடிப்பது முற்றிலும் தடை செய்யப்படும்.

இதற்கிடையில், பிரித்தானியா, தான் பிடிக்கும் மீன்களில் 75 சதவிகிதத்தை ஐரோப்பிய ஒன்றிய சந்தையில்தான் விற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்