பருவமடையாத சிறுமிகளை சீரழித்த எப்ஸ்டீனுக்கு எதிராக பிரான்சில் சாட்சியமளிக்க முன்வந்துள்ள 10 பேர்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பருவமடையாத சிறுமிகளை சீரழித்த அமெரிக்கரான எப்ஸ்டீன், பிரான்சிலும் பலரை சீரழித்துள்ளதாக 10 பேர் சாட்சியமளிக்க முன்வந்துள்ளதையடுத்து, பிரெஞ்சு அதிகாரிகள் விசாரணை ஒன்றை தொடங்கியுள்ளனர்.

அமெரிக்க பைனான்சியரான ஜெஃப்ரி எப்ஸ்டீன், ஏராளமான பருவமைடையாத சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததோடு, பல பிரபலங்கள் உட்பட செல்வந்தர்களுக்கும் சிறுமிகளை விருந்தாக்கியுள்ளார்.

எப்ஸ்டீனிடம் பாலியல் அடிமையாக இருந்த விர்ஜினியா ராபர்ட்ஸ் என்னும் பெண், அவர் எப்படியெல்லாம் சிறுமிகளை சீரழித்தார், தன்னை யாருக்கெல்லாம் விருந்தாக்கினார் என்பது உட்பட ஏராளமான தகவல்களை வெளியிட்டார்.

இந்நிலையில், 12 வயதேயான மூன்று பிரெஞ்சு சிறுமிகள் எப்ஸ்டீனுக்கு பரிசாக அளிக்கப்பட்டதாக சமீபத்தில் தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது.

பாரீஸில் இருக்கும் தனது வீடு ஒன்றிலிருந்து நியூஜெர்சிக்கு சென்றபோதுதான் எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டார்.

அத்துடன் எப்ஸ்டீனின் முன்னாள் காதலியும், அவருக்கு சிறுமிகளை சப்ளை செய்தவருமான ஒரு பெண்ணுடன் அவர் பாரீஸில் சுற்றும் படங்களும் வெளியாகியுள்ளன.

அத்துடன் அவர் பிரான்சிலும் பல சிறுமிகளை சீரழித்ததாகவும், பிரெஞ்சு சிறுமிகள் சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எப்ஸ்டீன் சப்ளை செய்த சிறுமிகளை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சிலர் சீரழித்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியானதையடுத்து, பிரான்ஸ் பொலிசார் விசாரணை ஒன்றை தொடங்கியுள்ளனர்.

அந்த விசாரணையின் நோக்கம், எப்ஸ்டீன் பிரான்சில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டாரா, பிரெஞ்சு குடிமக்கள் யாரேனும் உள் நாட்டிலோ அல்லது வெளி நாட்டிலோ பாதிக்கப்பட்டார்களா, பிரெஞ்சுக் குடிமக்கள் குற்றச்செயலில் ஈடுபட்டார்களா மற்றும் பிரான்சில் பிரெஞ்சுக் குடிமக்கள் அல்லாத சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளார்களா என பல விடயங்களை விசாரிப்பதாகும்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்