பிரித்தானியரை உயிருடன் கடித்து குதறிய சுறா.. வயிற்றுக்குள் திருமண மோதிரத்துடன் கிடைத்த துண்டிக்கப்பட்ட கை

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்ஸ் தீவில் கடலில் நீச்சலடிக்க சென்ற பிரித்தானியா சுற்றுலா பயணியின் துண்டிக்கப்பட்ட கை சுறா மீனின் வயிற்றில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

குறித்த உடல் பாகம் மடகாஸ்கருக்கு அருகிலுள்ள பிரான்ஸ் தீவான ரீயூனியனுக்கு மனைவியுடன் சுற்றுலா சென்ற 44 வயதான பிரித்தானியருடையது என நம்பப்படுகிறது.

சனிக்கிழமை Saint-Gilles-ல் கரையில் நீந்திக்கொண்டிருந்த போது சுறா அவரை தாக்கி தின்றதாக உள்ளுர் ஊடகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாரும் அவரது மனைவியும் ரீயூனியன் தீவிற்கு ஒரு வாரம் சுற்றுலா சென்றுள்ளனர். சனிக்கிழமையன்று கடலில் நீச்சலடிக்கச் சென்ற கணவர் கரை திரும்பாததை அடுத்து, மனைவி பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து, கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் உதவியுடன் முழு வீச்சில் அதிகாரிகள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். நீச்சல் வீரர்களும் கடலுக்கு அடியில் சென்று தேடியுள்ளனர். எனினும், கடைசி வரை மாயமான நபரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், இந்திய பெருங்கடலில் சுறா மீனின் வயிற்றில் மோதிரத்துடன் துண்டிக்கப்பட்ட கை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த கை டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, துண்டிக்கப்பட்டு கையில் இருந்த மோதிரம் தனது கணவர் அணிந்திருந்தது என மனைவி அடையாளம் கண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்