பிரான்சில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபர்! இறுதி நிமிடத்தில் ஹீரோவான பொலிசார்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் பெண் ஒருவர் இறுதி நிமிடத்தில் பாலியல் பலாத்காரத்தில் இருந்து பொலிசாரால் காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.

பிரான்சின் Puy-en-Velay நகரில் இருக்கும் வீடு ஒன்றில் கடந்த திங்கட் கிழமை காலை உள்ளூர் நேரப்படி 5 மணிக்கு பெண் ஒருவரின் அலறல் சத்தம் ஒன்று கேட்டுள்ளது.

இந்த சத்தத்தைக் கேட்ட அருகில் வசிப்பவர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்க, விரைந்து வந்த பொலிசார் குறித்த பெண்ணின் வீட்டை அடையாளம் கண்டுள்ளனர்.

அதன் பின் அந்த பெண்ணின் வீட்டு கதவை உடைத்து பொலிசார் உள்ளே சென்ற போது, அங்கு 19 வயது மதிக்கப்பட்ட பெண் ஒருவரை நிர்வாணப்படுத்தி, இளைஞர் ஒருவர் கத்தி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளான்

இதைக் கண்ட பொலிசார் உடனடியாக அந்த நபரிடமிருந்து குறித்த பெண்ணை மீட்டு, அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் காப்பாற்றப்பட்ட நபருக்கு உடல் அளவில் எந்த ஒரு காயமும் இல்லை எனவும், மனதளவில் அவர் பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக பொலிசார் கூறியுள்ளனர்.

இறுதி நிமிடத்தில் பொலிசாரால் பாலியல் பலாத்காரம் ஒன்று தடுக்கப்பட்டதால், அப்பகுதியில் இருந்த மக்கள் பொலிசாரை பாராட்டி வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்