பிரான்சிலிருந்து வந்த மகனை துடி துடிக்க கொலை செய்த தந்தை! கை, கால்களை கட்டிப் போட்டு தாக்கிய சம்பவம்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய மகனை தந்தையே அடித்து கொலை செய்துவிட்டு, பொலிசாரிடம் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் இருக்கும் வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் இறால் ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

இதில் மூத்த மகனான ரஞ்சித் பிரான்ஸ் குடியுரிமை பெற்று, அவரது மனைவியுடன் பிரான்ஸில் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 9-ஆம் திகதி விடுமுறைக்காக பிரான்சில் இருந்து, ரஞ்சித் தனியாக புதுச்சேரிக்கு வந்துள்ளார்.

புதுச்சேரி திரும்பிய அவர், தனது தந்தை குமாரிடம் 2 கோடி ரூபாய் கேட்டு தொந்தரவு செய்ததால், குமார் சொத்தை பாகம் பிரித்து பிறகு பணம் தருவதாக ரஞ்சித்திடம் கூறியுள்ளார்.

ஆனால் இதை ஏற்க மறுத்த ரஞ்சித், தினந்தோறும் குடித்துவிட்டு வந்து தனது தந்தையிடம் பிரச்சனை செய்து வந்துள்ளார்.

நேற்று இரவு வழக்கம்போல் மது அருந்திவிட்டு வீட்டிற்கு திரும்பிய ரஞ்சித், தந்தையிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.

அதன் பின், மது போதையில் தனது தாயை தலையணையால் அழுத்தி தாக்கியதைக் கண்டு, ஆத்திரமடைந்த தந்தை குமார், கரப்பான்பூச்சி மருந்தை எடுத்து ரஞ்சித்தின் முகத்தில் அடித்துள்ளார்.

இதில் மயக்கமடைந்து, கீழே விழுந்த ரஞ்சித்தின், கை மற்றும் கால்களை கட்டிப்போட்டு, இரும்பு கம்பியால் ரஞ்சித்தின் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த ரஞ்சித், சம்பவ இடத்திலே துடி துடித்து உயிரிழந்தார். அதன் பின் குமார் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்க, விரைந்து வந்த பொலிசார், ரஞ்சித்தின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பிவைத்துவிட்டு, குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers