அதிபர் ஒருவரின் உறவினருக்கு பிரான்சில் நான்கு ஆண்டுகள் சிறை!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

சிரிய அதிபர் பஷார் அல் அசாதின் சித்தப்பாவுக்கு பிரான்ஸ் நீதிபதிகள் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளனர்.

சட்ட விரோத பணப்பரிமாற்றம் மற்றும் சிரிய பொதுமக்கள் நிதியை தவறாக பயன்படுத்தி பிரான்சில் 90 மில்லியன் யூரோக்களுக்கு சொத்துக்கள் வாங்கியது ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

ரிஃபாத் அல் அசாத் (82) என்னும் அவரது பிரான்சிலுள்ள சொத்துக்களையும், லண்டனிலுள்ள 29 மில்லியன் மதிப்பிலான சொத்துக்களையும் பறிமுதல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தற்போதைய சிரிய அதிபரான பஷார் அல் அசாத்தின் தந்தையும் தன் அண்ணனுமான ஹஃபேசின் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் தோற்ற ரிஃபாத் அசாத், சிரியாவிலிருந்து தப்பி நான்கு மனைவிகள், 16 பிள்ளைகளுடன் ஐரோப்பாவிற்கு வந்து பாரீஸிலும் லண்டனிலுமாக தனது வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறார்.

Photograph: Michel Euler/AP

முன்னாள் இராணுவ தளபதியான ரிஃபாத் அசாத், டிசம்பரிலேயே விசாரணைக்கு வரவேண்டிய நிலையில், உடல் நலத்தை காரணம் காட்டி அவர் நீதிமன்றத்திற்கு வரவில்லை.

ரிஃபாத் அசாத் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதுடன், தனது சொத்துக்கள் சவுதி ராஜ குடும்பத்தினர் கொடுத்தவை என்று கூறியுள்ளார்.

அவரது சட்டத்தரணிகள் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

Photograph: AFP/Getty

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்