பிரான்ஸ் தலைநகரில் முகக்கவசம் அணிந்த படி ஆயுதங்களுடன் கொள்ளையர்கள்? விசாரணையில் தெரிந்த உண்மை

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்ஸ் தலைநகரில் முகக்கவசம் அணிந்த படி ஆயுதங்களுடன் கொள்ளையர்கள் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், அதன் உண்மை என்ன என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பரிஸ் 19-ஆம் வட்டாரத்தில் rue Vitruve-ல் கொள்ளைச் சம்பவம் நடைபெறுவதாக பொலிசாருக்கு நபர் ஒருவர் தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது, அங்கு ஆயுதங்களுடன் முகக்கவசங்களை அணிந்த படி இருந்தவர்கள், இவர்களைக் கண்டும் ஓடவில்லை.

இதனால் பொலிசார் பிடித்து விசாரணை மேற்கொண்ட போது, அவர்கள் உண்மையான கொள்ளையர்கள் இல்லை, ஆவணப்படம் ஒன்றிற்காக படம்பிடிப்பு நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

அவர்களிடம் இருந்து இரண்டு கைத்துப்பாக்கி, கிரனைட் குண்டுகள் மீட்கப்பட்டன. அவை அனைத்தும் போலியானவை என்பது தெரியவந்தது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்