பிரான்ஸ் மக்களுக்கு எச்சரிக்கை தகவல்! நாளை தலைநகர் பரிசை சூழ உள்ள சுற்றுச்சூழல் மாசடைவு

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சின் இல் து பிரான்சுக்குள் நாளை சுற்றுச் சூழல் மாசடைவு எல்லையை கடப்பதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக பிரான்சில் காற்றின் மாசு நிலை தூய்மடையிருந்த நிலையில், நாட்டில் தற்போது ஊரடங்கில் தளரவுகள் அறிவிக்கப்பட்டு வருவதால், மக்கள் தங்களுடைய அன்றாட வேலைக்கு திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில், நாளை வியாழக்கிழமை ஜூன் 25 ஆம் திகதி இல் து பிரான்சில் வெப்பநிலை 35 டிகிரி சி இனை தொடுகிறது.

இதனால் நாளை அண்ணளவாக 180 மைக்ரோ கிராம்ஸ் / m3 அளவில் மாசடைவு பதிவாக உள்ளதாக Airparif நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த அளவு 170 மைக்ரோகிராமில் இருந்து 200 கிராம் வரை பதிவாகலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளதால், பலவீனமான மக்கள், சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட கூடும் என்பதால் அவர்கள் வெளியே செல்வதை தவிர்க்கும் படி கோரப்பட்டுள்ளனர்

கொரோனா வைரஸ் காரணமாக மிக தூய்மையடையிருந்த இந்த சுற்றூசூழல் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு பின்னர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவதாக Airparif கணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்