பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் தான் இதை தீர்த்துவைக்க வேண்டும்! மாகாண முதல்வர் வலேரி பெக்ரெஸ்

Report Print Santhan in பிரான்ஸ்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டு வருவாய் இழப்பை இமானுவேல் மேக்ரான் தலைமையிலான அரசு தான் தீர்த்து வைக்க வேண்டும் மாகாண முதல்வர் வலேரி பெக்ரெஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக, 2020-ஆம் ஆண்டில், இல் து பிரான்சுக்கான பொது போக்குவரத்து (Ile-de-France Mobilités) 2.6 பில்லியன் யூரோக்களை இழந்துள்ளது.

இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை தொலைக்காட்சி ஒன்றில் தோன்றிய மாகாண முதல்வர் Valérie Pécresse, இந்த இழப்பை அரசு தான் சரிசெய்ய வேண்டும் என குறிப்பிட்டார். இதுவரை அரசு 450 மில்லியன் யூரோக்கள் வழங்குவதற்கு இணங்கியுள்ளது.

நாம் கிட்டத்தட்ட திவால் நிலையில் உள்ளோம். இது ஒரு உதவிக்கான அழைப்பு. இதை அரசின் காதுகள் செவி எடுக்கும் என்று தான் நாம்புவதாக Valérie Pécresse தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்