பிரான்சில் வீடற்றவர் நால்வருக்கு அடித்த அதிர்ஷ்டம்: பெண் ஒருவரின் சமயோசித முடிவு

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
557Shares

பிரான்சில் வீடற்றவர்கள் நால்வர், தங்களுக்கு தானமாக கிடைத்த லொட்டறியில் 50,000 யூரோ பரிசாக வென்றுள்ளனர்.

பிரெஞ்சு கடலோர நகரமான பிரெஸ்ட்டில் ஒரு கடைக்கு முன்னால் நான்கு வீடற்றவர்கள் கையேந்தி உதவி கோரியபடி இருந்துள்ளனர்.

அப்போது அந்த வழியாக சென்ற ஒரு பெண்மணி, அந்த நால்வருக்கும் பண உதவி செய்வதற்கு பதிலாக ஒரு யூரோ மதிப்பிலான லோட்டறி சீட்டு ஒன்றை தானமாக வழங்கியுள்ளார்.

குறித்த பெண்மணியின் சமயோசித முடிவு, தற்போது நான்கு வீடற்றவர்களின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றியுள்ளது.

லொட்டறியில் 50,000 யூரோ பரிசாக கிடைத்த நிலையில், தற்போது அந்த பணத்தை தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்ள முடிவு செய்துள்ளனர்.

இதனால் ஆளுக்கு தலா 12,500 யூரோ அளவுக்கு கிடைக்கும் என தெரிய வந்துள்ளது.

ஆனால், அந்த பணத்தை என்ன செய்யப் போகிறோம் என்பது தங்களுக்கு தெரியவில்லை என அந்த நால்வரும் தெரிவித்துள்ளதாக உள்ளூர் பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்