பிரான்ஸ் மக்களுக்கு எச்சரிக்கை! இது கொரோனாவில் இருந்து நம்மை காப்பாற்றாது: சுகாதார ஆலோசனை குழு சொன்ன தகவல்

Report Print Santhan in பிரான்ஸ்
905Shares

பிரான்ஸ் மக்கள் பெரும்பாலானோர் துணியால் முகக்கவசத்தை பயன்படுத்தி வருவதால், அது புதிய வகை கொரோனா பரவில் இருந்து பாதுகாக்காது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முகக்கவசம் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணியாமல் இருந்தால், அபராதமோ அல்லது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், இப்போது முகக்கவசம் என்பது ஒரு அன்றாட நாம் பயன்படுத்தும் ஒரு பொருள் போன்று ஆகிவிட்டது.

அந்த வகையில், பிரான்சிலும் முகக்கவசம் கட்டாயம் என்பதால், அங்கிருக்கும் மக்களின் பெரும்பாலானோர் துணிகளால் ஆன முகக்கவசங்களை அணிவதாக கூறப்படுகிறது.

ஆனால், பாதுகாப்பானது இல்லை என்றும், அரசாங்கம் அறிவுறுத்தியுள்ள முதல் வகை முகக்கவசமோ அல்லது 2-ஆம் வகை முகக்கவசமோ அணியும் படியும், துணி முகக்கவசங்கள் முற்றிலும் பாதுகாப்பானது இல்லை, என்று பிரான்ஸின் சுகாதார ஆலோசனைக் குழு எச்சரித்துள்ளது.

stock image

இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், வீட்டில் தயாரிக்கப்பட்ட முகக்கவசங்களை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால், இப்போது பிரித்தானியா மற்றும் தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அதன் தீவிரம் அதிகமாக இருப்பதால், அதில் நம்மை காத்து கொள்ள வேண்டும் என்றால், அதற்கு துணி முகக்கவசம் போதுமானதாக இருக்காது.

இது குறித்து பிரான்சின் சுகாதார ஆலோசனைக் குழு, ஹாட் கன்சீல் டி லா சாண்டே பப்ளிக் எச்.சி.பி.எஸ், துணி முகமூடிகள் மக்களுக்கு பாதுகாப்பான விருப்பமாக இருக்காது என்று கூறியுள்ளது.

எச்.சி.பி.எஸ்ஸின் கோவிட் -19 பணிக்குழுவின் இணைத் தலைவர் Didier Lepelletier கூறுகையில், சில புதிய வகைக தொற்று பரவும் போது, அது மிக வேகமாக பரவுகின்றனர்.

இதனால் மக்களுக்கு எந்த வகையான முகக்கவசம் அணிவது பாதுகாப்பானது என்பது குறித்து பரிந்துரைக்க வேண்டும்.

துணியால் ஆன, முகக்கவசங்களை மீண்டும் பயன்படுத்த முடியும் என்பதால், பெரும்பாலான மக்கள் அதை விரும்புகின்றனர்.

ஆனால், தற்போது பரவி வரும் புதிய வகை கொரோனாவில் இருந்து அது நம்மை பாதுகாக்குமா என்பதில் எந்த ஒரு உத்திரவாதமும் இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும், பிரான்சின் சுகாதார அமைச்சர் Olivier Véran, வீட்டில் தயாரிக்கப்பட்ட முகக்கவசம் பாதுகாப்பானதா என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக சரிபார்க்கப்படவில்லை, இதனால் பாதுகாப்பு நிலையை கருத்தில் கொண்டு மக்கள், பாதுகாப்பான முகக்கவசம் அணியும் படி கூறியுள்ளார்

பிரான்சில் தற்போது சுமார் 400 நகரங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மூக்கு மற்றும் வாயை முழுமையாக மறைக்கும் முகக்கவசத்தை மக்கள் அணிய வேண்டும்.

அப்படி இல்லையென்றால் 135 டொலர் அபராதம் விதிக்கப்படுவார்கள் என்றும் பிரெஞ்சு அரசாங்கம் கூறியுள்ளது.

அதுமட்டுமின்றி, பொதுமக்கள் வகை 1 மற்றும் வகை 2 என இரண்டு வகை முகக்கவசங்களை பயன்படுத்தும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதாவது, வகை 1 முகக்கவசம் 90 சதவீத பாதுகாப்பானது, வகை 2 முகமூடிகள் 70 சதவீதம் பாதுகாப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்