தடுப்பூசிக்காக போராடி தளர்ந்துபோன பிரான்ஸ்: தற்போது எடுத்துள்ள முடிவு

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
0Shares

ஒருபக்கம் ஆஸ்ட்ராசெனகா நிறுவனம் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளைவிட பிரித்தானியாவுக்கு தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை அளிப்பதாக எழுந்த குற்றச்சாட்டு,

மறுபக்கம் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியால் மூளையில் கட்டி முதலான பிரச்சினைகள், ஆக, தடுப்பூசி விநியோகப் பிரச்சினையுடன் போராடி பார்த்து, கடைசியில் தானே நேரடியாக தடுப்பூசி தயாரிப்பில் இறங்குவது என முடிவு செய்துவிட்டது பிரான்ஸ்.

பிரான்சில் ஐந்து இடங்களில் பைசர் மற்றும் மொடெர்னா தடுப்பூசிகள் தயாரிக்கப்பட உள்ளன.

ஆனால், உண்மையில் பிரான்சில் தடுப்பூசி நேரடியாக தயாரிக்கப்படப்போவதில்லை, தடுப்பூசி தயாரிப்பில் உதவுதல், அதை போத்தல்களில் அடைத்தல் போன்ற வேலைகள்தான் பிரான்சில் செய்யப்பட உள்ளன.

அதன் பிறகு, தடுப்பூசி ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் விநியோகிக்கப்படும். தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதில் சற்று பின் தங்கியே உள்ள பிரான்ஸ் கொரோனாவைக் கட்டுப்படுத்தவும் திணறிவருகிறது.

தற்போது, 5,300 பேர் மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் கொரோனாவுடன் போராடி வரும் நிலையில், மருத்துவமனைகள் நிரம்பிவிடுமோ என்ற அச்சம் நிலவுவதையும் மறுப்பதற்கில்லை.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்