ஜேர்மனியின் இருண்ட காலத்தை மறக்க நடவடிக்கையா: பெர்லின் தெருக்களின் பெயர் மாற்றங்கள்

Report Print Balamanuvelan in ஜேர்மனி
147Shares
147Shares
ibctamil.com

1884-1919 காலகட்டங்களில் ஜேர்மானிய காலனி ஆதிக்கத்தின்போது நடைபெற்ற அராஜகங்களை நினைவுபடுத்தும் தெருக்களின் பெயர்களை மாற்ற முடிவுசெய்யப்பட்டுள்ளது.

ஜேர்மனியின் தலைநகரான பெர்லினின் ஆப்பிரிக்க பகுதி என அழைக்கப்படும் வட மேற்குப்பகுதியில் உள்ள தெருக்களின் பெயர்களை மாற்ற உள்ளூர் கவுன்சிலர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இந்த மாற்றத்திற்காக சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக விவாதங்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில் இறுதி வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட உள்ளது.

ஜேர்மனியின் ஏகாதிபத்திய கடந்த காலத்துடன் தொடர்புடைய தெருக்களின் பெயர்கள் மாற்றப்பட்டு அதற்கு பதிலாக விடுதலைப் போராட்ட வீரர்களின் பெயர்கள் வைக்கப்படும்.

AFP

இருபதாம் நூற்றாண்டின் முதல் இனப்படுகொலை என வரலாற்றாளர்களால் அழைக்கப்படும் ஏகாதிபத்திய கடந்த காலத்தை ஜேர்மனி ஒப்புக்கொள்கிறது. 1904க்கும் 1908க்கும் இடையே சுமார் ஒரு லட்சம் பூர்வக்குடிமக்களாகிய ஹெரேரோ மற்றும் நமா இனத்தவர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவங்களை நினைவுபடுத்தும் வகையில் வைக்கப்பட்டிருந்த பெயர்கள் மாற்றப்பட்டு Maji Maji Boulevard, Anna Mungunda Boulevard, Cornelius Frederiks Street மற்றும் Bell Square ஆகிய பெயர்கள் வைக்கப்பட உள்ளன.

Maji Maji என்பது ஜேர்மானிய காலனி ஆதிக்கத்திற்கு எதிராக போராடிய பூர்வக்குடிமக்கள் பயன்படுத்திய ஒரு கோஷம். Anna Mungunda என்பவர் விடுதலைப் போராட்ட இயக்கத்தில் தலைமையேற்ற முதல் ஹெரேரோ இனப் பெண்மணி.

Cornelius Frederiks ஜேர்மானிய ஏகாதிபத்திய ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடிய நமா இன மக்களை நடத்தியவர்.

Rudolf Douala Manga Bell என்பவர் தனது மனைவியுடன் இணைந்து வெள்ளை இன காலனி ஆதிக்கத்தவர்கள் நிலங்களை கையகப்படுத்தியதை எதிர்த்த Cameroonஇலுள்ள ஒரு Duala மன்னர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்