ஜேர்மனி வரலாற்றிலேயே முதன்முறையாக பொலிஸாரின் மாபெரும் ரெய்டு

Report Print Balamanuvelan in ஜேர்மனி

இன்று காலை ஜேர்மனி பாதுகாப்புப்படைகள் பெண்களைக் கடத்தி பாலியல் தொழிலுக்குள் தள்ளும் கூட்டத்தைப் பிடிப்பதற்காக பல இடங்களில் ரெய்டுகள் நடத்தின.

SWAT டீம் உட்பட சுமார் 1500 பொலிஸார் இந்த ரெய்டுகளில் பங்குபெற்றனர். வடமேற்கு ஜேர்மன் மாகாணமான North Rhine-Westphaliaவில் உள்ள பல இடங்களில் ரெய்டுகள் நடத்தப்பட்டன.

தாய்லாந்திலிருந்து பெண்களைக் கடத்தி வரும் ஒரு கும்பலைப் பிடிப்பது இந்த ரெய்டின் முக்கிய நோக்கமாகும்.

அந்த கும்பல் போலி விசாக்கள் மூலம் பெண்களையும் திருநங்கைகளையும் தாய்லாந்திலிருந்து ஜேர்மனிக்கு கடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த கும்பல் ஒரு விசாவுக்கு 16,000 யூரோக்கள் முதல் 30,000 யூரோக்கள் வரை கட்டணம் விதிக்கிறது.

பின்னர் அந்த தொகையை திரும்ப வசூலிப்பதற்காக அந்தப் பெண்களை பாலியல் தொழிலுக்குள் தள்ளுகின்றது.

ஜேர்மனியில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் 17 பேரை பொலிஸ் குறி வைத்துள்ளது. இதுவரை Siegenஐச் சேர்ந்த 59 வயது தாய்லாந்து பெண் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்னும் பல மணி நேரங்களுக்கு ரெய்டு தொடரும் என்றும் பலர் கைது செய்யப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்