அகதிகளை அவதிக்குள்ளாக்கும் ஜேர்மன் அதிகாரிகள்: தேங்கி கிடக்கும் புகலிடக் கோரிக்கைகள்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

போருக்குத் தப்பி உயிர் பிழைக்க ஓடி வந்த அகதிகளுக்கு தனது நாட்டின் எல்லைகளைத் திறந்து விட 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் எடுத்த முடிவின் பயனாக பல்லாயிரக்கணக்கான அகதிகள் ஜேர்மனியில் அடைக்கலம் புகுந்தனர்.

ஆனால் மூன்றே ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை மில்லியனை எட்டியதால் ஜேர்மனியின் அகதிகள் ஏஜன்சியும் சட்ட அமைப்பும் குவிந்து கிடக்கும் விண்ணப்பங்களை பரிசீலிக்க இயலாமல் தேக்க நிலையை அடைந்துள்ளன.

இதன் விளைவாக பல அகதிகள் தாங்கள் ஜேர்மனியில் வாழ அனுமதிக்கப்படுவோமா என்பது

தெரியாத குழப்ப நிலையிலேயே காணப்படுகின்றனர்.

ஈராக்கிலிருந்து தப்பி வந்த Zaid al-Ahmadன் முதல் புகலிடக் கோரிக்கை 2016ஆம் ஆண்டு புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் அலுவலகத்தால் நிராகரிக்கப்பட்டது.

உடனடியாக 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் அதை எதிர்த்து மேல் முறையீடு செய்தார்.

அது முதல் பெர்லின் நீதிமன்றங்களின் முடிவுக்காக அவர் காத்திருக்கிறார்.

புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் அலுவலகத்தைப் போலவே நீதிமன்றங்களிலும் மேல் முறையீட்டு விண்ணப்பங்களும், வசிப்பிட உரிம விரிவாக்க கோரிக்கைகளும் குவிந்து கிடக்கின்றன.

பலர் நாடு கடத்தலை எதிர்த்து தடை வாங்க அவசரம் காட்டுகிறார்கள். புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் அலுவலகத்தில் நிகழும் தவறுகள் மற்றும் அலட்சியமான முடிவுகளே நீதிமன்றத்தில் இவ்வளவு விண்ணப்பங்கள் குவிய காரணம் என்கிறார்கள் விமர்சகர்கள்.

மக்களின் எதிர் காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு தகுதியற்ற அலுவலர்களை வேலைக்கு வைத்திருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். இதனால் இரண்டில் ஒரு விண்ணப்பம் சட்டப்பூர்வ மேல் முறையீட்டிற்காக செல்ல வேண்டியதாயிற்று.

இப்படி புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் அலுவலகம் மற்றும் நீதிமன்றங்களால் அலைக்கழிக்கப்படும் அகதிகள் எதிர் காலம் அறியாதவர்களாக குழப்பத்தில் காலம் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers