நித்திரையிலேயே உயிரிழந்த ஜேர்மன் நடிகை

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனியின் பிரபல நடிகை Hannelore Elsner ஈஸ்டர் பண்டிகை அன்று உயிரிழந்துள்ளார்.

திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட இவர் தனது நித்திரையிலேயே உயிரிழந்துவிட்டதாகவும் மேற்கொண்டு தகவல்கள் தெரிவிக்க இயலாது, குடும்பத்தின் தனி உரிமைக்கு மரியாதை அளிக்க வேண்டும் என குடும்ப வழக்கறிஞர் பிரியான்ஸ் தெரிவித்துள்ளார்.

1942 இல் ஆஸ்திரிய எல்லைக்கு அருகிலுள்ள பர்ஹாசென் நகரில் பிறந்தார் Hannelore Elsner.

பேர்லினிலும், முனிச் திரையரங்குகளில் பணியாற்றுவதற்கு முன்னர் நாடக பாடசாலைக்கு சென்றார்.

1959 ஆம் ஆண்டு Old Heidelberg என்ற படத்தில் முதல் முறையாக நடித்தார். இவரது கடைசி படம் 2014 ஆம் ஆண்டு வெளியான Auf das Leben ஆகும்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்