ஜேர்மனியில் ஓரினச்சேர்க்கை பென்குயின் செய்யும் ஆச்சரிய செயல்..! வீடியோ

Report Print Kabilan in ஜேர்மனி

ஜேர்மனியில் உள்ள மிருகக்காட்சி சாலையில் ஓரினச்சேர்க்கை ஆண் பென்குயின் ஒன்று, முட்டையை அடைக்காத்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக பென்குயின்கள் ஒவ்வொரு ஆண்டும் முட்டையிட்டு, அடைகாக்கும் காலம் உண்டு. பெண் பென்குயின் முட்டையிடுவதை, ஆண் பென்குயின் 60 நாட்களாக அடைகாக்கும். அப்போது பெண் பென்குயின் ஆணுக்காக இரையை வேட்டையாடி கொண்டுவரும்.

இந்நிலையில், பெர்லினில் உள்ள மிருகக்காட்சி சாலை ஒன்றில் ஓரினச்சேர்க்கை ஆண் ஜோடி உள்ளது. இவை தான் உலகத்தின் கவனத்தைத் தற்போது ஈர்த்துள்ளன. இந்த பென்குயின்களுக்கு முட்டையை அடைகாக்கும் ஆவல் ஏற்பட்டுள்ளது.

எனவே, அங்கிருந்த கல் ஒன்றை முட்டையாக கருதிய ஒரு பென்குயின், அதனை அடைகாக்கத் தொடங்கியது. ஆனால், இறுதிவரை முட்டை பொறிக்காததால் ஏமாற்றமடைந்திருக்கிறது. இதனை கவனித்த மிருகக்காட்சிச்சாலை நிர்வாகம், உண்மையான முட்டையை பென்குயின்கள் அடைகாப்பதற்காக வைத்துள்ளது.

தற்போது அந்த முட்டையை ஓரினச்சேர்க்கை பென்குயின்களில் ஒன்று அடைகாக்கத் தொடங்கியுள்ளது. ஒருவேளை முட்டை பொறித்து குஞ்சு வெளியேறினால், இந்தப் பென்குயின்கள் பெற்றோர்களாக மாறக்கூடும்.

10 வயதாகும் இந்த பென்குயின்களை காண்பதற்காகவே பார்வையாளர்கள் இந்த மிருகக்காட்சி சாலைக்கு வருகை தருகின்றனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்