பட்டப்பகலில் பெண்ணை கொலை செய்து தப்பிய கொலையாளியால் மேற்கு ஜேர்மனியில் ரயில் சேவை கடும் பாதிப்பு!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் பட்டப்பகலில் பெண் ஒருவரை கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு தப்பியோடிய கொலையாளியை பிடிப்பதற்காக ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டு ரயில் நிலையம் மூடப்பட்டுள்ளது.

Elze நகரில் 52 வயது நபர் ஒருவர் ஒரு பெண்ணை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார்.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, அந்த நபர் அந்த பெண்ணை கத்தியால் குத்தி, தீயணைக்கும் கருவியால் அடித்து, அது போதாதென்று பெட்ரோல் ஊற்றி கொளுத்தியிருக்கிறார்.

அங்கிருந்தவர்கள் அந்த 44 வயது பெண்ணை காப்பாற்ற முயன்றும் பயனில்லாமல் அந்த பெண் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கொலை செய்த நபர் மோட்டார் சைக்கிள் ஒன்றில் தப்பியோடிய நிலையில், அவரை ஹெலிகொப்டர் மூலம் தேடும் பணியும் தொடர்கிறது.

இதற்கிடையில் அந்த கொலையாளி ரயிலில் ஏறியதாக பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், Elzeக்கு அருகில் அந்த ரயில் நிறுத்தப்பட்டது.

ரயில்வே ஊழியர்கள் சந்தேகத்துக்குரிய அந்த நபரை ரயில் பெட்டியில் வைத்து கதவை பூட்டியிருக்கிறார்கள்.

ஆனால் பொலிசார் அங்கு வந்து பார்க்கும்போது, அந்த நபர் ரயிலின் ஜன்னல் ஒன்றை உடைத்துவிட்டு தப்பி விட்டார்.

இதனால் அந்த நபர் அப்பகுதியில்தான் இருப்பார் என்ற சந்தேகத்தின்பேரில் ரயில் சேவை நிறுத்தப்பட்டு ரயில் நிலையமும் அதை சுற்றிலும் உள்ள பகுதிகளும் மூடப்பட்டுள்ளன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்