வங்கியில் நடந்த குளறுபடி: 170,000 யூரோ தொகையை சொகுசாக செலவிட்ட ஜேர்மானியர்

Report Print Arbin Arbin in ஜேர்மனி
302Shares

ஜேர்மனியில் ஹனோவர் பகுதியை சேர்ந்த நபரை, நீதிமன்றம் ஒரு பெருந்தொகையை வங்கியில் திருப்பிச் செலுத்த உத்தரவிட்டுள்ளது.

ஹனோவர் பகுதியில் குடியிருக்கும் 30 வயதான நபரின் வங்கிக் கணக்கில் திடீரென்று 170,000 யூரோ வரவு வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் எவருக்கும் தெரியப்படுத்தாத அந்த நபர் சொகுசாக செலவிட தொடங்கியுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24 முதல் 27 ஆம் திகதி வரை அந்த நபர் எவ்வித நோக்கமும் இன்றி சுமார் 92,000 யூரோ அளவுக்கு, அந்த தொகையில் செலவிட்டுள்ளார்.

ஹொட்டல் மற்றும் வாடகை டாக்ஸி பயணத்திற்காக 3,600 யூரோ அளவுக்கு செலவிட்டுள்ளார்.

சுமார் 15,000 யூரோ சூதாட்டத்தில் தொலைத்துள்ளார். மட்டுமின்றி 18,500 யூரோ அளவுக்கு பாலியல் தொழிலாளர்களுக்கு கட்டணமாக அளித்துள்ளார்.

இவரிடம் இருந்து 50,000 யூரோ அளவுக்கு களவு போனதாகவும் கூறப்படுகிறது.

தமது வங்கிக் கணக்கில் கணக்கில் வராமல் வரவு வைக்கப்பட்ட இந்த தொகையை தாம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதை அவர் உணர்ந்தே செலவிட்டுள்ளதாக நீதிமன்ற விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, அந்த மொத்த தொகையையும் திருப்பிச் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019 ஜூலை மாத மத்தியில், குறித்த நபருக்கு அவரது வங்கிக்கணக்கில் 170,000 யூரோ தவறுதலாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

இவரது மனைவி, குறித்த வங்கியில் பணியாற்றி வருபவர். வங்கி மேற்கொண்ட துறை ரீதியான விசாரணையில், அந்த தொகையை குறித்த பெண்மணியே தமது கணவரின் கணக்கில் பரிவர்த்தனை செய்துள்ளார்.

ஒரு கட்டுமான நிறுவனத்திற்கு அளிக்க வேண்டிய தொகையானது தவறுதலாக, அந்த ஹனோவர் பகுதி நபருக்கு வரவு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்