எங்கள் நாட்டில் கொரோனா அதிகரிப்பதற்கு இந்த நாடுதான் காரணம்: ஜேர்மன் மாகாணம் குற்றச்சாட்டு

Report Print Balamanuvelan in ஜேர்மனி

எங்கள் நாட்டில் கொரோனா அதிகரிப்பதற்கு ஆஸ்திரியா நாடும் ஒரு காரணம் என ஜேர்மன் மாகாணமான பவேரியாவின் நிர்வாகி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பவேரியாவிலுள்ள Rottal-Inn என்னும் பகுதியில் அதிகமாக கொரோனா பரவியுள்ளது, எனவே அங்கு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. Rottal-Inn பகுதி ஆஸ்திரியா நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது.

அந்த பகுதியில் 100,000 பேரில் 239.5 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள். இதுதான் ஜேர்மனியிலேயே அதிக அளவில் கொரோனா தொற்றியுள்ள பகுதி என உள்ளூர் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Rottal-Inn பகுதியின் நிர்வாகியான Michael Fahmüller, தங்கள் பகுதியில் கொரோனா அதிகரிப்புக்கு ஆஸ்திரியாவும் ஒரு காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த சில வாரங்களாக பவேரியாவை விட ஆஸ்திரியாவில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மிகவும் தளர்த்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஆனால், ஜேர்மனியைப் பொருத்தவரை, ஆஸ்திரியாவின் பெரும்பாலான பகுதிகள் அபாய பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, அந்த பகுதிகளிலிருந்து பவேரியாவுக்குள் வருபவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அத்துடன், திங்கட்கிழமையன்று, ஆஸ்திரியாவிலிருப்பவர்கள் அத்தியாவசிய தேவை இருந்தாலன்றி பவேரிய எல்லையை கடந்து வரவேண்டாம் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த கட்டுப்பாடுகள் அவசியம்தான் என்பதை உறுதி செய்வதுபோலவே, ஆஸ்திரியாவின் பல பகுதிகளில் அதிக அளவில் கொரோனா தொற்று காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்