ஜேர்மனியில் பயங்கரம்! பொதுமக்கள் மீது பயங்கரமாக மோதிய கார்: 2 பேர் பலி பலர் படுகாயம் என தகவல்

Report Print Santhan in ஜேர்மனி

ஜேர்மனியில் பாதசாரிகள் மீது திடீரென்று கார் மோதியதால், இதில் 2 பேர் பலியாகியிருப்பதுடன் ஏராளமானோர் படுகாயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜேர்மனியின் Trier நகரில் சற்று முன் பாதசாரிகள் மீது திடீரென்று கார் ஒன்று பயங்கரமாக மோதியுள்ளது.

இந்த விபத்து காரணமாக இதுவரை 2 பேர் பலியாகியுள்ளதுடன், 15 பேர் காயமடைந்திருப்பதாக, Trier நகரின் மேயர் தெரிவித்துள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

Credit: Alamy

மேலும், இந்த சம்பவம் குறித்து Trier நகர பொலிசார் தங்களுடைய டுவிட்டர் பக்கத்தில், இந்த சம்பவம் காரணமாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இப்பகுதியை தயவு செய்து மக்கள் தவிர்க்கும் படியும், அவரது வாகனம் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பொலிசார் முதற்கட்ட விசாரணையில், இரண்டு பேர் உயிரிழந்திருப்பதை உறுதிபடுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்