ஜேர்மனியை உலுக்கும் பிரேசிலில் உருமாற்றம் கண்ட கொரோனா தொற்று

Report Print Arbin Arbin in ஜேர்மனி
0Shares

பிரித்தானியாவில் உருமாற்றம் கண்ட கொரோனா தொற்றை அடுத்து, தற்போது பிரேசிலில் உருமாற்றம் கண்ட கொரோனா தொற்றானது ஜேர்மனியில் பரவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரேசில் நாட்டில் உருமாற்றம் கண்ட கொரோனா தொற்றானது உலகின் 28 நாடுகளில் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், மிக விரைவில் பாதிப்பை ஏற்படுத்தும் பிரேசில் தொற்றானது, ஆபத்தானதும் கூட என நிபுணர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரேசில் தொற்றானது அசல் உருமாற்றம் கண்ட தொற்றை விட 1.4 முதல் 2.2 மடங்கு அதிகமாக பரவும் வீதம் இருக்கும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், ஏற்கனவே கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கும் பிரேசில் தொற்று பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகளும் அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், இது அதிக மரணங்களுக்கு வழிவகுக்கும் என்றும் நம்பப்படுகிறது. ஜனவரி மாதம் முதன் முறையாக ஹாம்பர்க் பகுதியில் பிரேசில் தொற்று கண்டறியப்பட்டது.

இந்த வாரம் தெற்கு ஜேர்மனிய மாநிலமான பவேரியாவில் குறைந்தது 57 பேர்கள் ஏற்கனவே பாதிப்புக்கு உள்ளானார்கள் என்பது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது பயன்பாட்டில் உள்ள கொரோனா தடுப்பூசிகள் பிரேசில் தொற்றிற்கு எதிராக செயல்படும் என்பதில் தெளிவான தரவுகள் ஏதும் இல்லை என்றே தெரிய வந்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்