காரமான உணவை சாப்பிட்டு நாக்கு எரியுதா? உடனே இதை செய்யுங்க போதும்

Report Print Raju Raju in ஆரோக்கியம்

பலர் மிளகாய், மிளகு தூள்கள் கலந்த காரமான மற்றும் சூடான உணவுகளை சாப்பிட்டு விட்டு நாக்கு எரிச்சலாக இருக்கிறது என செய்வதறியாது திணறுவார்கள்.

இது போன்ற சமயத்தில் பலர் தண்ணீர் அருந்துவார்கள். ஆனால், மிளகுகளின் திசுக்களில் இருக்கும் capsaicin என்ற பொருள் தண்ணீர் குடிப்பதால் நாக்கு எரிச்சலை மேலும் அதிகபடுத்தும்.

நாக்கு எரிச்சலை கட்டுப்படுத்த சாப்பிட வேண்டிய உணவுகள்

பால்

ஒரு டம்ளர் பால் குடித்தால் நாக்கு எரிச்சல் சரியாகும். பாலில் இருக்கும் casein என்ற புரத சத்து capsaicinன் சக்தியை எதிர்கொள்ள உதவுகிறது.

சுவை அதிகமில்லாத உணவுகள்

பிரட், சாதம், உருளைகிழங்கு போன்ற சுவை அதிகமில்லாத உணவுகளை காரத்தால் நாக்கு எரிச்சல் ஏற்படும் போது சாப்பிட்டால் பிரச்சனை குறையும்.

சர்க்கரை

ஒரு ஸ்பூன் சர்க்கரை அல்லது சர்க்கரை கட்டியை நாக்கு எரிச்சல் ஏற்படும் போது வாயில் போட்டு சாப்பிட்டால் நாக்கு எரிச்சல் நிற்கும்.

எலுமிச்சை

எலுமிச்சையில் அடங்கியிருக்கும் அமில தன்மை வாயின் உள்ளே ஏற்படும் எரிச்சலை கட்டுப்படுத்தும்.

தேன்

வாயின் உள்ளே எரிச்சல் ஏற்படும் சமயத்தில் ஒரு ஸ்பூன் தேனை நாக்கை சுழற்றி சாப்பிட்டால் எரிச்சல் குறையும்.

வாழைப்பழம்

நாக்கு எரிச்சலடையும் சமயத்தில் வாழைப்பழம் சாப்பிடலாம்

வாழைப்பழத்தின் சுவை நாக்கில் ஏற்பட்டுள்ள எரிச்சலை உடனடியாக குறைக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments