தினம் இந்த சாற்றை பருகுங்கள்: அற்புதம் இதோ

Report Print Printha in ஆரோக்கியம்

சுரைக்காயில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, புரோடீன் விட்டமின் B, C போன்ற பல சத்துகள் அடங்கியுள்ளது.

இத்தகைய சத்துக்களை உள்ளடக்கிய சுரைக்காய் மற்றும் அதை சாற்றை தினமும் அருந்தி வந்தால் ஏராளமான மருத்துவ பயன்களை பெறலாம்.

சுரைக்காயின் நன்மைகள்
  • சுரைக்காய் குடுவையில் நீர் நிரப்பி, அந்த நீரை தினமும் குடித்து வந்தால் உடலின் வெப்பம் குறைந்து குளிர்ச்சியாகும்.
  • தினசரி சுரைக்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், பித்தம் சமநிலை அடையும், ஆண்மைக் குறைபாடு, கல் அடைப்பு ஆகிய பிரச்சனைகள் நீங்கும்.
  • சுரைக்காயின் சதைப் பகுதியை துணியில் வைத்து அதை கை, கால்கள் மற்றும் பாதங்களில் எரிச்சல் உண்டாகும் பகுதியில் வைத்து கட்டினால் விரைவில் குணமாகும்.
  • சுரைக்காயின் சதைப் பகுதியோடு எலுமிச்சை பழத்தின் சாற்றை கலந்து அதை தலையில் தேய்த்து குளித்து வந்தால், உடல் குளிர்ச்சி பெறும்.
  • தினமும் சுரைக்காய் சாறு அருந்தி வந்தால், சிறுநீர் பாதையில் ஏற்படக்கூடிய எரிச்சல் மற்றும் சிறுநீர்ப்பாதை தொற்று ஆகியவை குணமாகும்.
  • சுரைக்காயுடன் பாசிப்பயிறு சேர்த்து கூட்டு வைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும், தாய்பால் சுரப்பு அதிகமாகும்.
  • சுரைக்காயின் சதைப்பகுதியை அரைத்து நெற்றியில் தடவி வர, கண் எரிச்சல், தலைவலி குணமாகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers