முக்கனிகளின் ஒன்றான வாழைப்பழத்தின் அற்புத பலன்கள்

Report Print Gokulan Gokulan in ஆரோக்கியம்
406Shares
406Shares
lankasrimarket.com

எல்லோராலும் விரும்பி சாப்பிடக்கூடிய பழம் எளிதில் கிடைக்கக்கூடிய பழம் முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம்.

அதுமட்டுமின்றி எல்லாக் காலங்களிலும் , எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடிய பழம் வாழைப்பழம், இதை ஏழைகளின் கனி என்றும் கூறுவார்கள்.

இந்த வாழைப்பழங்களில் வகை வகையான பழங்கள் உள்ளது. அதன் பயன்களை நாமும் தெரிந்து கொள்ளுவோம்.

  • பூவன் வாழைப்பழம் எல்லா இடங்களிலும் பரவலாகக் கிடைக்கும் . இது ஜீரண சக்தியை உண்டாக்கும். தினமும் உணவிற்குப்பின் இதனை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் உண்டாகாது.
  • பச்சை வாழைப்பழம் நல்ல குளிர்ச்சியை தரும். கோடைக் காலங்களில் தாராளமாக உண்ணலாம்.
  • வாத நோயாளிகள் குறைத்துக் கொள்வது நல்லது. இது உடல் உஷ்ணத்தை குறைக்கும்.
  • மொந்தன் வாழைப்பழம் உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும். காமாலைக்கு இது சிறந்த பழம்.
  • ரஸ்தாளிப் பழம் சுவை மிக்கதாகும். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை உண்ணக்கூடிய பழம். குழந்தை வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளன. இப்பழத்தை தினமும் உண்டு வந்தால் இருதயம் பலப்படும்.
  • நேந்திரம் பழம் என அழைக்கப்படும் வாழைப் பழம் கேரளாவில் அதிகம் விரும்பி உண்ணப்படுகிறது. காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இப்பழத்தில் ஒன்றும், முட்டை ஒன்றும் உண்டுவர, காசநோய் விலகி உடல் புஷ்டிக்கும்.
  • சிறு குழந்தைகளுக்கு, ஆறு மாதத்திற்கு மேல் நன்றாகப் பழுத்த நேந்திர பழத்தை சிறிது உப்பிட்டு, வேகவைத்து நன்றாக பிசைந்து தரலாம். இது நல்ல ஊட்டச் சத்தாகும். அதோடு இது ஜீரணிக்க சற்று நேரமாகும் என்பதால் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு உகந்தது.
  • செவ்வாழைப் பழம் உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும். நரம்புத் தளர்ச்சியை போக்கும். இதனை உடல் மெலிந்தவர்கள் தொடர்ந்து உண்டு வந்தால், உடல் பருமனடையும், வைட்டமின் A அதிகம் உள்ளதால் கண்ணுக்கு பலம் தரும்.
  • உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். தோல் வியாதிகளையும் குணப்படுத்தும். அதிகம் பேதி கண்டவர்கள் இப்பழத்தை பொரிகடலையுடன் சேர்த்து உண்டால் பேதி நிற்கும். ஏதாவது ஒரு வாழைப் பழத்தை தினமும் உணவிற்குப் பின் உண்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அடையும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்