உங்களுக்கு இரத்த அழுத்தம் இருக்கா? எப்படி சரி செய்வது... உடனே இதை படிங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்
1073Shares

இரத்த அழுத்தம் என்பது இரத்தக் குழல்களின் சுவர்களில் இரத்தச் சுற்றோட்டத்தினால் ஏற்படும் அழுத்தமாகும்.

இதயம், உடலில் ரத்த ஒட்டத்தை இயக்க, இரு வித அழுத்தங்களை உண்டாக்குகிறது.

விரிந்து அழுத்தத்தை உண்டாக்குவது. விரிவதால், உடலின் எல்லா பாகங்களிலிருந்து வரும் அசுத்த ரத்தத்தை வாங்கிக் கொள்கிறது. இதை ‘டையஸ்டோல்’ அழுத்தம் என்பார்கள்.

சுருங்கி அழுத்தத்தை உண்டாக்குவது உள்வாங்கியதை பம்பில் செய்யும் இந்த அழுத்தம் சிஸ்டாலிக் எனப்படுகிறது.

இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான ஆபத்தை அதிகரிக்கிறது.

அந்தவகையில் இதிலிருந்து விடுபட சில எளிய வைத்திய முறைகளை பற்றி பார்ப்போம்.

ISTOCK.COM/STOCKVISUAL
  • கண்டங்கத்தரி செடியின் அனைத்து பாகங்களையும் வெயிலில் காயவைத்து பொடி தயாரித்து தேன்கலந்து தினமும் இருவேளை சாப்பிட்டு வர இரத்த அழுத்தம் சீராகும்.
  • உணவில் மற்ற எண்ணெய்களுக்குப் பதிலாக நல்லெண்ணெய் உபயோகித்து வரவேண்டும்.
  • தனியா, சர்பகந்தாவேர், கொஞ்சம் வெல்லம் மூன்றையும் சம அளவில் எடுத்துக் கொண்டு பொடி தயாரித்து 2 தேக்கரண்டி அளவு நீரில் கலந்து தினமும் 2 வேளை பருகிவர இரத்த அழுத்தம் சீராகும்.
  • சர்ப்பகந்தா வேர் பொடி ஒரு தேக்கரண்டி அளவு நீரில் கலந்து இருவேளை அருந்தி வர உயர் இரத்த அழுத்தம் குறைந்து சீராகும்.
  • நெல்லி வற்றல், பாசிப்பயறு இரண்டும் சம அளவு எடுத்துக்கொண்டு ஒரு லிட்டர் நீரில் கலந்து நன்கு சுண்டக் காய்ச்சி, தினமும் 2 தேக்கரண்டி அளவு இருவேளை குடித்துவ இரத்த அழுத்தம் குறைந்து சீராகும்.
  • வெள்ளைப்பூண்டு, மிளகு தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • தினமும் ஒரு தேக்கரண்டி வெங்காயசாறுடன் தேன்கலந்து சாப்பிட்டு வர இரத்த ஓட்டம் சீராகும்.
  • உயர் இரத்த அழுத்தம் குறைய தினமும் நித்திய கல்லயாணி பூ இலைச்சாறு பருகிவர வேண்டும்.
  • கண்டத்திப்பிலி ரசம் அவ்வப்பொழுது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • இலவமரப் பசைப்பொடி , சர்க்கரை, நெய் கலந்து லட்டுபோல் தயாரித்து சாப்பிட்டுவர இரத்த ஓட்டம் சீராகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்