வெறும் தரையில் படுத்து தூங்குபவரா நீங்கள்? அதனால் உடலுக்கும் மனதுக்கும் ஏற்படும் நன்மைகள் இவைதான்

Report Print Raju Raju in ஆரோக்கியம்
511Shares

பலரும் கட்டில், மெத்தையில் படுத்து உறங்கவே விரும்புவார்கள். அதே நேரம் வெறும் தரையில் படுத்து தூங்குவதும் பலருக்கு பிடிக்கும்.

இப்படி தரையில் படுத்து உறங்குவதால் பல நன்மைகள் ஏற்படுகின்றது என்பது உங்களுக்கு தெரியுமா?

முதுகு தண்டு பாதுகாப்பு

மூளையுடன் நேராக இணைக்கப்பட்ட மத்திய நரம்பு மண்டலத்தை தாங்குவது உங்கள் முதுகு தண்டாகும். உடலில் இது ஒரு முக்கியமான பகுதியாகும். ஒரு நல்ல தோற்றம் உங்கள் முதுகு தண்டுக்கு ஆரோக்கியத்தை வழங்குகிறது. நெரித்த நரம்புகள் மற்றும் மோசமான முதுகெலும்புகள் ஆகியவற்றின் சாத்தியக்கூறை உங்கள் நல்ல தோற்றம் குறைக்கின்றன.

கீழ் முதுகு வலியை குறைக்கும்

பொதுவாக பலரும் முதுகின் கீழ் பகுதி வலியால் பாதிக்கப்படுவர். மேலே கூறியபடி முதுகு பகுதியை தரையில் வைத்து படுக்கும்போது, இந்த வலிக்கு ஒரு சிறந்த நிவாரணம் கிடைக்கிறது. இந்த கீழ் முதுகில் வலி வருவதற்கு காரணம் நரம்புகள் நெறிக்கப்படுவதுதான். சில நேரம் எலும்புகள் தடம் மாறுவதால் இவை ஏற்படலாம்.

கவலை இன்றி தூக்கம்

போர்வை, பெட் ஷீட் , தலையணை என்று எதை பற்றியும் கவலை பட வேண்டாம். மெத்தை மற்றும் கட்டில் நமது எடையை தாங்குமா அல்லது உடைந்து விழுமா என்ற சந்தேகம் வேண்டாம். உங்கள் உடலை ஆசுவாசமாக தரையில் கிடத்தி எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் உறங்கலாம்.

மூச்சு திணறல் பிரச்சினை

தரையில் படுத்து உறங்குவதால் உடலில் எந்த ஒரு பாகத்திலும் தவறான சீரமைப்பு ஏற்பட வாய்ப்புகள் மிகவும் குறைவு. தலையணை இன்றி உறங்குவதால் மூச்சு திணறல் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.

சோர்வு நீங்கும்

நல்ல தோற்றத்தில் மற்றும் நல்ல நிலையில் படுக்கும்போது, உடல், மூளைக்கு தான் மிகவும் சௌகரியமாக உணர்வதாகவும், மகிழ்ச்சியாக இருப்பதாகவும் சிக்னல் அனுப்புகிறது. இதனால் நேர்மறை எண்ணங்கள் தூண்டப்பட்டு மனமும் உடலும் ஆரோக்கியமாக மாறும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்