உடலுக்கு வலிமை தரும் குதிரைவாலியின் அற்புத பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்

Report Print Nalini in ஆரோக்கியம்
185Shares

குதிரைவாலி புற்கள் வகையைச் சேர்ந்த ஒரு தாவரம் ஆகும். இது ஒருவகைப் புன்செய் பயிராகும். குதிரைவாலிக்கு புல்லுச்சாமை என்ற பெயரும் உண்டு. குதிரைவாலி ஆங்கிலத்தில் Horse-tail Millet, Barnyard Millet என்று அழைக்கபடுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண்மை சாகுபடி பணிகள் வடகிழக்கு பருவமழையை நம்பியே நடைபெறுகிறது. முக்கிய பயிரான நெல் சாகுபடி ஏறத்தாழ 1.30 லட்சம் ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. நெல் சாகுபடி பெரும்பாலும் முன் பருவ விதைப்பாக மழையை எதிர்பார்த்து விதைக்கப்படுகிறது.

குதிரைவாலி மற்ற சிறுதானிய வகைகளை விட அளவில் மிகமிகச் சிறியது. மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியது என்ற பழமொழிக்கு ஏற்ற மிகச்சிறந்த உதாரணம் குதிரைவாலியாகும். இது கால்சியம், மணிச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த பச்சையம் இல்லாத சிறுதானியமாகும்.

குதிரைவாலி கோதுமையை விட ஆறு மடங்கு நார்ச்சத்து உள்ளது. பி-கரோட்டின், மாவுச்சத்து, கால்சியம், பி-கரோட்டின், 47 மி.கி, தயமின், ரிபோப்ளோவின் ஆகிய சத்துக்களும் அடங்கி உள்ளன.

குதிரைவாலி வரலாறு

 • குதிரைவாலி இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் போன்ற நாடுகளில் நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே பயிரிடபட்டு வருகின்றது. ஆனால் முதன் முதலில் இது எங்கு பயிரிடப்பட்டது என்று தெரியவில்லை. நெல் போன்ற பயிர்கள் விளையாத நிலங்களில் இவை அதிகமாகப் பயிரிடப்படுகிறது.

குதிரைவாலியின் நன்மைகள்

 • இரத்த சோகை வராமல் இருப்பதற்கு குதிரைவாலி அரிசி மிகவும் முக்கியமான பங்கு வகிக்கின்றன.
 • குதிரைவாலி அரிசி சாப்பிட்டு வந்தால் நார்ச்சத்து நன்றாக இருக்கும்.
 • குதிரைவாலியை தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
 • செரிமான பிரச்சனைகள், ரத்தசோகை நோய் உள்ளிடவற்றை குணப்படுத்துகிறது.
 • இது சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி கொண்டது. இதனால் உடலில் உள்ள தேவையற்ற உப்புகளை கரைக்கும்.
 • கண் சம்பந்தமான பிரச்சனைகளை சரி செய்யும் ’பீட்டா கரோட்டின்’, இதில் அதிகமாக உள்ளது.
 • இது ஆண்டி ஆக்சிடன்ட் ஆகவும் வேலை செய்கிறது.
 • ஊட்டச்சத்துகள் மிகுந்த குதிரைவாலி அரிசியில் நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து அதிகளவு உள்ளது. இது உடலில் ஏற்படும் மலச்சிக்கலை தடுப்பதிலும், கொழுப்பின் அளவை குறைப்பதிலும் உதவுகிறது.
 • செரிமானத்தின் போது ரத்தத்தில் இருந்து குளுக்கோஸ் அளவை மெதுவாக வெளியிடுவதற்கும் உதவுகிறது. இதய நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவாகப் பயன்படுகிறது.
 • உடலில் கபம் அதிகமாகி அதனால் அடிக்கடி சளி, காய்ச்சலால் அவதிப்படுவார்கள் குதிரைவாலி அரிசியை சாதம் செய்து சாப்பிடலாம். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அடிக்கடி சளி, காய்ச்சல் ஏற்படாமல் தடுக்கும்.
 • குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு மலச்சிக்கலை தடுப்பதற்கு குதிரைவாலி அரிசி பயன்படுத்தப்படுகிறது.
 • செரிமான சக்தியை நம் உடலுக்கு கூட்டுவதற்கு குதிரைவாலி அரிசி மிகவும் நன்றாக பயன்படுத்துகிறது.
 • நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக வதற்கு குதிரைவாலி அரிசி முக்கியமான பங்கு வகிக்கின்றன.
 • குதிரைவாலி அரிசி என்பது கஞ்சி வைத்தும் சாப்பிடலாம் அல்லது சர்க்கரை பொங்கல் வைத்து சாப்பிட்டு வரலாம்.
 • அப்படி இல்லை என்றால் மதியம் சாப்பாட்டிற்கு சிறிதளவு குதிரைவாலி அரிசியின் சாப்பாட்டுக்கு சேர்த்து சாப்பிட்டு வரலாம் அதுவும் உடல் ஆரோக்கியம்தான்.
 • குழந்தைகளுக்கு குதிரைவாலி அரிசி கஞ்சி செய்து கொடுத்தால் மிகமிக நல்லது மற்றும் அவர்கள் உடல் ஆரோக்கியத்துக்கு மிக நன்றாக இருக்கும்.
 • நம் உடலில் இருக்கும் சூட்டு தன்மையைக் குறைப்பதற்கு குதிரைவாலி அரிசி மிகவும் உதவுகிறது.
 • குதிரைவாலி அரிசியுடன் சிறிது பாசிப்பருப்பு சேர்த்து வெண்பொங்கல் செய்தும் சாப்பிட்டு வரலாம் மிக மிக ருசியாக மற்றும் ஆரோக்கியமாக இருக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்