போடுங்கடா ஓட்டு இல்லாட்டி வேட்டு: இது சிம்பு ஸ்பெஷல்

Report Print Fathima Fathima in இந்தியா
போடுங்கடா ஓட்டு இல்லாட்டி வேட்டு: இது சிம்பு ஸ்பெஷல்

தமிழக சட்டசபை தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடிகர் சிம்பு, பாடல் ஒன்றை எழுதி தயார் செய்து வருகிறார்.

சிம்பு எழுதியுள்ள பாடலில் இருந்து சில வரிகள்:

ஓட்டு போட வேண்டியது உன் கடமை

போடலைன்னாஅது உன் மடமை

எதுக்குடா போடணும்னு நினைக்கிறது கொடுமை

அதனாலத் தான் நம்ம நாட்டுல இவ்வளவுவறுமை

நான் ஒருத்தன் போடலைன்னா என்னனு நீ நினைப்ப

உனக்கு வேண்டிய மாற்றத்தை நீயே தான் தடுப்ப

எவன் ஜெயிச்சா எனக்கு என்னனு நீ இருப்ப

தமிழ்நாட்டோட வளர்ச்சியை நீயே தான் கெடுப்ப

போடாம விட்டது பலவாட்டி

போட்டுத்தான் பாருடா இந்த வாட்டி

போடுங்கடா ஓட்டு இல்லாட்டி வேட்டு

போடுங்கடாஓட்டு அதுக்குத்தான் இந்த பாட்டு

இதுகுறித்து சிம்புகூறுகையில், அப்பாவை போன்று எதுகை மோனையுடன் எழுத வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு இப்பாடலின் மூலம் நிறைவேறியுள்ளது.

தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும், இதற்காக வெறுமென வீடியோவில் அனைவரும் ஓட்டு போடுங்கள் என்று சொல்ல முடியாது.

பீப் பாடலை நான் வெளியிடவில்லை, அந்த விவகாரத்தின் போது பலரும் என்னிடம், நீங்கள் ஒரு பாடலை வெளியிட்டால் தமிழ்நாடே கேட்கும் என்று சொன்னார்கள்.

அதற்காக தான் இந்த பாடலை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments