தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை மணமில்லாத வெறும் 'காகிதப் பூ': கருணாநிதி

Report Print Basu in இந்தியா
தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை மணமில்லாத வெறும் 'காகிதப் பூ': கருணாநிதி

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை காகிதப் பூ என்று, தி.மு.க தலைவர் கருணாநிதி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை; மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறையின் அளவு வரையறுக்கப்பட்ட 3 சதவிகிதத்தைவிட, 2017-2018-ஆம் ஆண்டில் 3.34 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது என்றால், எந்த அளவுக்கு நிதி நிலை உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

வருவாய் வரவுடன் ஒப்பிட்டால், கடனின் அளவு அதிகமாக இருப்பதால், அது சிறந்த நிதி மேலாண்மைக்கு அடையாளமாகாது என்று கருணாநிதி கூறியுள்ளார். முக்கியமான பல்வேறு துறைகளுக்கு இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையின் அளவு கூட, திருத்தப்பட்ட நிதி நிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மொத்தத்தில், இந்த பட்ஜெட் ஏழை எளிய நடுத்தர மக்களின் கண்ணீரைத் துடைப்பதாக இல்லை என்றும், மணமில்லாத வெறும் காகிதப் பூ, தாகத்திற்கு உதவாத கானல் நீர் என்றும் விமர்சித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments