திமுக தலைவர் கருணாநிதி எப்படி இருக்கிறார்: கனிமொழி வெளியிட்ட புகைப்படம்

Report Print Arbin Arbin in இந்தியா

நீண்ட நாட்களுக்குப் பிறகு திமுக தலைவர் கருணாநிதியின் புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் கருணாநிதியுடனான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்து நாளேட்டின் தொழிற்சங்க தலைவராக கனிமொழி தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து அவர் வாழ்த்து பெற்றுள்ளார்.

அப்போது எடுத்துக் கொண்ட படத்தை டுவிட்டரில் கனிமொழி வெளியிட்டுள்ளார்.

கருணாநிதியைத் தொடர்ந்து, கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன், செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரைச் சந்தித்தும் கனிமொழி வாழ்த்து பெற்றதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments