தற்கொலை செய்து கொண்ட வாலிபரின் கடிதம் சிக்கியது

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழ்நாட்டில் Blue Whale விளையாடிய வாலிபர் தினேஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை செங்குன்றத்தை சேர்ந்தவர் திருவாவுக்கரசு, இவரது மகன் தினேஷ்.

மும்பையில் உள்ள தனியார் நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார்.

தீபாவளிக்காக சென்னை வந்த தினேஷ் குடும்பத்தினருடன் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.

இதன்பின்னர் முழு நேரத்தையும் ஸ்மார்ட்போனிலேயே செலவிட்டுள்ளார், வீட்டில் இருந்த யாருடனும் பேசவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தினேஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து விரைந்த சோழவரம் பொலிசார் விசாரணை நடத்தி வந்தனர், தினேஷின் மடிக்கணனி, போனை சோதித்த போது Blue Whale விளையாடியது தெரியவந்தது.

மேலும் கடிதத்தில், எனக்கு தெரியாமல் ஏதோ புதிய உலகம் தெரிகிறது. நான் மெல்ல மெல்ல எழுந்துகொண்டே போகிறேன் என எழுதியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers