மனைவியுடன் நண்பருக்கு தகாத உறவு: ஆத்திரத்தில் கணவன் செய்த செயல்

Report Print Raju Raju in இந்தியா

விவாகரத்து பெற்ற முன்னாள் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த தனது நண்பரை கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாட்டின் சென்னையை சேர்ந்தவர் செந்தில்ராஜ் (42) பல் மருத்துவர். இவரது நண்பர் சஞ்சீவி ராஜ் (33).

செந்தில்ராஜ் திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இவரது மனைவி சுரேகா சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

விவாகரத்தான போதிலும் சுரேகாவுடன் செந்தில்ராஜ் நட்பாகவே இருந்து வந்தார். இந்நிலையில் சுரேகாவுக்கும், சஞ்சீவிராஜுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதையறிந்த செந்தில்ராஜ் சஞ்சீவிராஜை கொல்ல திட்டமிட்டார்.

இதையடுத்து செந்தில்ராஜ், சஞ்சீவிராஜ், சுரேகா உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழு மாமல்லபுரத்தில் உள்ள சொகுசு விடுதியில் கடந்த சனிக்கிழமை அறை எடுத்து தங்கினர்.

அப்போது எல்லோரும் மது அருந்திய நிலையில் சஞ்சீவிராஜை செந்தில்ராஜ் கத்தியால் குத்தியுள்ளார்.

உயிருக்கு போராடிய அவரை அருகிலிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு போன நிலையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் மருத்துவர் செந்தில்ராஜை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்