பெற்ற தாயை நடுரோட்டில் கொடூரமாக தாக்கிய மகன்

Report Print Kabilan in இந்தியா
327Shares
327Shares
lankasrimarket.com

உத்திரபிரதேசத்தில் தாய் வீட்டுக்கு வர மறுத்ததால், அவரது மகன் கொடூரமாக தாக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஜோகேந்திர சௌத்ரி, ஆங்கில ஆசிரியராக பணிபுரியும் இவர், தனது 82 வயதான தாயை பொதுவெளியில் அடித்து உதைத்துள்ளார்.

அச்சமயம் அந்த பக்கமாக சென்றவர்கள் எவரும், ஜோகேந்திரரை தடுக்கவில்லை. மேலும், பொலிசாருக்கும் யாரும் இதுகுறித்தும் தகவல் அளிக்கவில்லை.

இந்நிலையில் யாரோ ஒரு நபர் இச்சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இந்த வீடியோவைப் பார்த்த பொலிசார் துரிதமாக செயல்பட்டு ஜோகேந்திராவை கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஜோகேந்திரா குடிப்பழக்கம் உள்ளவர் என்றும், இரண்டு நாட்களாக காணாமல் போன தனது தாயை கண்டுபிடித்தபோது, அவர் தன்னுடன் வர மறுத்துள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த தான் அவரை அடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்