இளம்பெண்கள் கடத்தலுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் தென்னிந்திய திரைப்படத்துறை

Report Print Balamanuvelan in இந்தியா

டோலிவுட் என்று அழைக்கப்படும் தென்னிந்தியாவின் தெலுங்குப் படவுலகம் பாலியல் நோக்கங்களுக்காக பல்வேறு வயதுடைய பெண்கள் கடத்தப்படுவதற்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளது.

பெண்களை ஆபாசமாகக் காட்டுவதற்கும், இரட்டை அர்த்த வசனங்களுக்கும் பெயர் பெற்ற தெலுங்குப் படவுலகம் உலகத்திற்கு ஒரு நம்ப முடியாத இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

பாலியல் நோக்கங்களுக்காக இளம்பெண்கள் கடத்தப்படுதல் மற்றும் கட்டாயப்படுத்தி பெண்களை விபச்சாரத்திற்கு தள்ளுதல் ஆகியவற்றிற்கு எதிராகப் போராடும் அமைப்பான Prajwala என்னும் அமைப்பின் நிறுவனரான Sunitha Krishnan, கடத்தப்படுபவர்களில் 30 சதவிகிதம் இளம்பெண்கள் மொடல் ஆகும் ஆசையிலும் சினிமாவில் நடிக்கும் ஆசையிலும் வருபவர்கள் என்கிறார்.

பாலியல் நோக்கங்களுக்காக பெண்களை நாடும் ஆண்களின் மனதை மாற்றும் முயற்சியின் முதல் கட்டமாக ‘Stop Demand’ என்னும் initiativeஇன் ஒரு பகுதியாக ஆறு படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

முதலில் இவை பாலியல் நோக்கங்களுக்காக இளம்பெண்களைக் கடத்துவதற்கெதிரான மாநாடு ஒன்றில் திரையிடப்பட உள்ளன.

பின்னர் இவை தியேட்டர்களிலும் தொலைக்காட்டியிலும் ஒளிபரப்பப்படும். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 200,000 பெண்களும் குழந்தைகளும் விபச்சாரத்திற்குள் தள்ளப்படுகின்றார்கள்.

இந்தியாவிலுள்ள 20 மில்லியன் பாலியல் தொழிலாளிகளில் 16 மில்லியன் பெண்கள் கடத்தி வரப்பட்டவர்கள்.

இந்தியாவிலேயே அதிக பெண்கள் பாலியல் நோக்கங்களுக்காக கடத்தப்படுவது ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இருந்துதான்.

தற்போது அதே தெலுங்கு திரைப்பட உலகம் பாலியல் நோக்கங்களுக்காக பெண்கள் கடத்தப்படுவதற்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கியிருப்பது வரவேற்கத் தக்கதுதானே.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்