கதறி அழுத சிம்பு: வைகோ உருக்கம்

Report Print Deepthi Deepthi in இந்தியா
1103Shares
1103Shares
ibctamil.com

வைகோவின் மருமகன் தீக்குளித்து இறந்ததற்கு நடிகர் சிம்பு போனில் தொடர்பு கொண்டு கதறி அழுது ஆறுதல் தெரிவித்ததாக வைகோ தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த வைகோவின் மருமகன் சுரேஷ், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்துபோனார்.

அவரது உடல் பொதுமக்கள் மரியாதைக்காக கோவில்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் மாலை 6 மணி அளவில் கோவில்பட்டி அருகே உள்ள பெருமாள் பட்டி என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

மருமகனை அடக்கம் செய்த பின்னர், பத்திரிகையாளர்களை சந்தித்த வைகோ, சரவண சுரேஷ் உயிர் பிரிவதற்கு 10 நிமிடம் முன்பு ஸ்டாலின் என்னிடம் பேசி ஆறுதல் தெரிவித்தார். நான் இதற்கு முன் பேசி பழகியிராத நடிகர் சிம்பு போனிலேயே கதறி அழுதார்.

தீக்குளித்த காட்சியை தொலைக்காட்சியில் பார்த்து இரவெல்லாம் இறைவனைப் பிராத்தித்தேன் என்று அவர் கதறி அழுதார்.

எனக்கும் சிம்புவுக்கும் முன்பின் பழக்கம் கிடையாது. அவரது மனிதாபிமானத்திற்கு நன்றி தெரிவித்தேன். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று முழக்கமிட்டவாறு சரவண சுரேஷ் உயிரிழந்திருக்கிறார்.

நான் சொல்கிறேன் நரேந்திர மோடி அரசு எந்த நாளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காது என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்