சென்னை வெள்ளத்தில் காணாமல் போன நபர்: 3 ஆண்டுகளுக்கு பிறகு எலும்புக்கூடாக மீட்பு

Report Print Deepthi Deepthi in இந்தியா

2015 ஆம் ஆண்டு சென்னை வெள்ளத்தில் காணாமல் போன நபர் 3 ஆண்டுகளுக்கு பிறகு எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளார்.

சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஏராளமானோர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர், பலர் மாயமானார்கள்.

முடிச்சூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் ஏ.சி.மெக்கானிக்காக பணியாற்றி வந்த அருண்குமார் (வயது 24) தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.

இந்நிலையில் தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர் சமத்துவபெரியார் நகர் பகுதியில் உள்ள அடையாறு ஆற்று கரையோர முட்புதரில் மனித எலும்புக்கூடு கிடந்தது.

இதுபற்றி அப்பகுதி மக்கள் பொலிசிற்கு தகவல் தெரிவித்தனர். பொலிசார் விரைந்து வந்து எலும்புக் கூடுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினார்.

அப்போது அங்குள்ள முட்புதரில் கிடந்த அடையாள அட்டையை கைப்பற்றினார். அதில் அருண் குமார் என்று குறிப்பிட்டு இருந்தது.

எனவே மீட்கப்பட்ட எலும்புக்கூடு பெருவெள்ளத்தின்போது மாயமான அருண்குமாருடையதாக இருக்கலாம் என்று பொலிசார் கருதுகிறார்கள்.

மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. ரசாயன பரிசோதனைக்கு பின்னர் அவை அருண்குமாரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers