பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட எஸ்எஸ்எல்சி தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் அதில் 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

10-ஆம் வகுப்புக்கான தெரிவுகள் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதத்தில் முடிவடைந்தன. இதன் முடிவுகள் இன்று வெளியானது.

இதில் 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 5456 அரசு பள்ளிகள் 91.3 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

மாணவர்களை காட்டிலும் மாணவிகள் 3 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி விகிதத்தை பொறுத்தவரை சிவகங்கை மாவட்டம் முதல் இடத்தையும் , ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடத்தையும் விருதுநகர் மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.

மொத்தம் 9.5 லட்சம் பேர் தேர்வு எழுதினர். அவர்களுள் 8.97 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழில் 96.42 சதவீதமும், ஆங்கிலத்தில் 96.50 சதவீதமும், அறிவியலில் 98.47 சதவீதமும், சமூக அறிவியலில் 96.75 சதவீதமும், கணிதத்தில் 96.18 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10-ஆம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஜூன் 28-ஆம் திகதி மறுதேர்வு நடைபெறுகிறது.மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers