தூத்துக்குடி போராட்டத்தில் பொலிசார் பயன்படுத்திய துப்பாக்கி குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Deepthi Deepthi in இந்தியா

தூத்துக்குடி துப்பாக்கிசூடு குறித்து அதிர்ச்சி தகவலை பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ளார்.

நேற்றைய போராட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிசூட்டில் 11 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், பொலிசார் பயன்படுத்திய துப்பாக்கிகள், இந்தியாவில் இதற்கு முன்னர் எந்த கலவரத்திலும் பயன்படுத்தப்படாத துப்பாக்கிகள் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு சம்பவம் திட்டமிட்ட படுகொலை என்று கூறிய அவர், இதற்கு பொறுப்பேற்று முதலமைச்சர், காவல்துறை உயரதிகாரிகள், ஆட்சியர் ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் கூறினார்.

தமிழகத்தில் இனி யாரும் போராடக்கூடாது என்று அச்சுறுத்தும் வகையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டினார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers