முஸ்லீம் ஊழியர் வேண்டாம்! சர்ச்சையை ஏற்படுத்திய இளம்பெண்ணின் மதரீதியான டுவிட்

Report Print Deepthi Deepthi in இந்தியா

மும்பையில் பூஜா என்ற பெண், ஏர்டெல் டீடிஎச்-ஐ மறுஇணைப்பு செய்வதற்காக வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொண்டபோது ஏர்டெல் ஊழியர்க தன்னிடம் தவறாக பேசியதாக டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

அத்துடன், அந்த சேவை பொறியாளர் தொலைபேசி எண்ணையும் பதிவு செய்து, வாடிக்கையாளரின் பணத்தை கொள்ளையடிப்பதே ஏர்டெல்லின் பணி என குற்றம்சாட்டியுள்ளார்.

பூஜாவின் இந்த புகார் டுவிட்டை பார்த்ததும், ஏர்டெல் நிறுவனம் ஊழியர் ஒருவர் உடனடியாக அதற்கு பதிலளித்தார். அந்த பதிலில், உடனடியாக இது போன்ற விஷயத்தை கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி இதுதொடர்பாக நாங்கள் கூர்ந்து கவனித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம்.

நன்றி , ஷோயஃப்; என தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலளித்துள்ள பூஜா, ஷோயப் நீங்கள் ஒரு முஸ்லீம். எனக்கு உங்கள் பணி நேர்மை மீது நம்பிக்கை இல்லை. ஏனெனில் குரானில் வாடிக்கையாளர் சேவை குறித்து பல முறைகள் உள்ளது. எனவே நீங்கள் ஒரு இந்து பிரதிநிதியை நியமிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இவரின் இந்த டுவிட்டுக்கு ஏர்டெல் நிறுவனம் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல், பூஜா உங்களுக்கு எந்த நேரத்தில் வேண்டும் எனக்கூறுங்கள் நாங்கள் சிறந்த முறையில் உங்கள் கோரிக்கை செய்து தருகிறோம்.

உங்களின் தொலைபேசி எண்ணை பகிருங்கள், அதில் உங்களுக்கு தகவல்களை வழங்குகிறோம். நன்றி இப்படிக்கு ககன்ஜோத் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது பூஜா கோரிக்கைப்படி முஸ்லீம் ஊழியரை மாற்றி, இந்து ஊழியரை ஏர்டெல் நியமித்துள்ளது. இதற்கு சமூக வலைதளங்களில் பலரும் தற்போது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்தப் பெண்ணையும், ஏர்டெல் நிறுவனத்தையும் கேள்விகள் எழுப்பி, நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

குறிப்பாக தனது ஊழியரை சிறுமைப்படுத்திய வாடிக்கையாளரை கண்டிக்காமல் ஏர்டெல் ஆளை மாற்றியது சரியா ? என கேள்வி எழுப்பியுள்ள நெட்டிசன்கள், இது போன்ற சமயத்தில் ஏர்டெல் அந்த வாடிக்கையாளருக்கு சேவையை நிறுத்தி அனுப்பியிருக்க வேண்டும் என்றும் மத ரீதியில் ஒரு நிறுவன ஊழியரை சிறுமைப்படுத்துவது ஏற்புடையது அல்ல என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers