தமிழர் அடித்து கொலை: பரபரப்பு பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

கேரள மதுவிலக்கு பொலிசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தமிழக இளைஞர் மர்மமாக இறந்த நிலையில் அவர் உறவினர்கள் பொலிஸ் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அனிஷை கடந்த 23-ஆம் திகதி கேரள மதுவிலக்கு பொலிசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

விசாரணையின் போது தூக்கில் தொங்கி தற்கொலை செய்ய அனிஷ் முயன்றதாகவும், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் 25-ம் திகதி அனிஷ் உயிரிழந்ததாக பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அனிஷ் உடலில் காயம் உள்ளதால் பொலிசார் அடித்ததில் தான் அவர் உயிரிழந்தார் என அவர் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது குறித்து அவர்கள் புகார் அளித்த நிலையில் களிக்காவிளை பொலிசார் வாங்க மறுத்ததால், காவல்நிலையத்தை முற்றுகையிட்டு அனிஷின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பத்மநாபபுரம் எம்எல்ஏ மனோ தங்கராஜ், அனிஷ் உறவினர்களுடன் சென்று திருவனந்தபுரம் சப்-கலெக்டர் இன்பசேகரிடம் புகார் அளித்தார்.

இன்பசேகர் முன்னிலையில் 5 மருத்துவர்கள் அனிஷை பிரேதப் பரிசோதனை செய்ததை வீடியோவில் பதிவு செய்தனர்.

விசாரணையின் போது பொலிசார் தாக்கி உயிரிழந்து பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இன்பசேகர் உறுதியளித்ததை ஏற்று அனிஷின் உடலை அவரது உறவினர்கள் வாங்கி சென்றார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்