கருணாநிதியின் இதயம் நின்று துடித்ததா? உண்மையை கூறும் மருத்துவர்

Report Print Deepthi Deepthi in இந்தியா

மருத்துவர் எழிலன் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு தனி மருத்துவராக கடந்த ஆண்டுகளாக இருந்து வந்துள்ளார்.

கருணாநிதி குறித்து இவர் பகிர்ந்துகொண்டதாவது, மருத்துவர் சொல்லை கேட்பதில் கலைஞர் மிக ஒழுக்கமான மாணவர். தன் உடல் ரீதியான பிரச்னைகளை புரியும் வண்ணம் மிகத் துல்லியமாக கேட்டுக் கொள்வார்.

அதுபோல, மருத்துவரின் சொல்லுக்கு மிகவும் மதிப்பளித்து அப்படியே கீழ்படிவார். தனது உடலை பேணிகாக்க வேண்டும் என்பதில் மிக அக்கறையுடன் செயல்பட்டார். அந்த ஒழுக்கம்தான் அவரை இத்தனை ஆண்டுகள் பெரிய தடைகள் ஏதுமின்றி இயங்க வைத்திருக்கிறது.

ஜூலை 30 இரவு அவர் உடல் நலம் குறித்து ஒரு வதந்தி பரவியது, எனக்கே அன்றிரவு அவர் இறந்துவிட்டார் என்று குறுஞ்செய்தி வந்தது. அன்றிரவு அவர் உடல் சற்று மோசமடைந்தது உண்மைதான்.

ஆனால், இவர்கள்சொல்வது போல அவர் இதயம் நின்றெல்லாம் துடிக்கவில்லை. என்னதான் அவர் கட்டுகோப்பாக இருந்தாலும், வயது மூப்பின் காரணமாக அவரது உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழக்க தொடங்கியது என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்