மகன் இறந்த அதிர்ச்சியில் தாயாரும் மரணம்: கதறும் உறவினர்கள்

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழகத்தில் மகன் இறந்த துக்கம் தாங்காமல் தாயாரும் உயிரை விட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தக்கலை அருகே திக்கணங்கோடு மாங்காடு பகுதியை சேர்ந்தவர் மைக்கேல்ராஜ்(வயது 46).

இவருக்கு செல்லா பங்கஜம் என்ற மனைவியும், ஜெனிலா, ரீபன் என இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

ஐஎஸ்ஆர்ஓ நிறுவனத்தில் டெக்னீசியனாக பணியாற்றி வந்த மைக்கேல்ராஜீக்கு திடீரென உடல்நலம் குன்றியது.

இதனால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் கடந்த 29ம் திகதி கலமானார்.

இவரது சடலத்தை உறவினர்கள் வீட்டுக்கு கொண்டு வந்த போது, தாயார் மரியரோசிலி(வயது 70) கதறி அழுதார்.

மகனை பார்த்த அதிர்ச்சியில் மயங்கி விழவே, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

மைக்கேல்ராஜ் இறந்த துக்கம் தாங்காமல் இருந்த உறவினர்கள், மரியரோசிலியும் இறக்க சோகத்தில் மூழ்கிப்போயினர்.

முதலில் மகனையும், பின்னர் தாயாரையும் அடக்கம் செய்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers