முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு உயர்ந்தது: எவ்வளவு தெரியுமா?

Report Print Deepthi Deepthi in இந்தியா

பிரபல போர்பஸ் பத்திரிக்கை நடப்பாண்டுக்கான இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது

. இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் இடத்தை ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்துள்ளார்.

அம்பானியின் சொத்து மதிப்ப சுமார் 47.3 பில்லியன் டொலர்கள் ஆகும்.

இந்த வருடம் மட்டும் அவரின் சொத்து மதிப்பு சுமார் 9.3 பில்லியன் டொலர்கள் அதிகரித்திருக்கிறது. ஜியோ அதிரடி அறிவிப்பு முகேஷ் அம்பானிக்கு சந்தையில் பெரும் பயனளித்து வருகின்றது.

விப்ரோ தலைவர் அஸிம் பிரேம்ஜி 2 ஆயிரத்து 100 கோடியுடன் இரண்டாம் இடத்தையும், அர்செலோர் மித்தல் குழுமத்தின் தலைவர் லக்‌ஷ்மி மிட்டல் ஆயிரத்து 800 கோடி சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

ஹிந்துஜா சகோதர்கள், ல்லோஜி மிஸ்ட்ரி, தமிழகத்தை சேர்ந்த ஷிவ் நாடார், கோத்ரேஜ் குழுமம், திலீப் சங்வி, குமார் பிர்லா மற்றும் கௌதம் அதானி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்