கணவனுக்கு இரண்டு மனைவிகள்: முதல் மனைவியின் மோசமான செயலால் நேர்ந்த விபரீத சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா
181Shares
181Shares
ibctamil.com

ஆந்திராவில் காவலரின் இரண்டாவது மனைவியை முதல் மனைவி மோசமாக துன்புறுத்தியதால் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மடனபள்ளி நகரை சேர்ந்த வெங்கடரமணா பொலிஸில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் வெங்கடரமணாவின் இரண்டாவது மனைவி சரஷ்வதியுடன் முதல் மனைவிக்கு அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

மேலும், சரஷ்வதியை அவர் தொடர்ந்து மோசமாக துன்புறுத்தி வந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த சரஷ்வதி நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தாய் சடலமாக தூக்கில் தொங்குவதை பார்த்த சரஷ்வதியின் பிள்ளைகளான ஹர்ஷவர்தன் (14) மற்றும் பிரவாலிகா (12) அதிர்ச்சியடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சரஷ்வதியின் சடலத்தை கைப்பற்றிவிட்டு இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்