வைரமுத்து - சின்மயி விவகாரம்: பெயர்களை கேட்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது! ஏ.ஆர்.ரஹ்மான்

Report Print Deepthi Deepthi in இந்தியா

மீடூ விவகாரம் தமிழ் சினிமாவில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அதுகுறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

வைரமுத்துவின் வரிகளில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தான் சின்மயி அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.

வைரமுத்து மீது சின்மயி பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்ததையடுத்து, மேலும் இரண்டு பெண்களும் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

அதில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடுவதற்கு வாய்ப்பு வாங்கி தருகிறேன் என வைரமுத்து கூறியதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், சமீபத்தில் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி ரெய்ஹானா, சின்மயி மீடூ மூலம் வைரமுத்து மீது குற்றச்சாட்டுகளை கூறியதை கேட்டு ஏ.ஆர்.ரஹ்மான் அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்தார்.

இது உண்மையா என தன்னிடம் கேட்டதாக சகோதரி ரெய்ஹானா பேட்டியில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் மீடூ குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், பாதிக்கப்பட்டவர்களின் குரல் ஓங்கி ஒலிக்க சமூக வலைதளங்கள் பெரும் சுதந்திரத்தை கொடுத்துள்ளன. சினிமாதுறை பெண்களை மதிக்கும் துறையாக இருக்க விரும்புகிறேன். பாதிக்கப்பட்டவர்கள், குற்றம்சாட்டப்பட்டவர்களின் பெயர்களை கேட்கும் போது அதிர்ச்சி அளிக்கிறது என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers